மாற்றுத்திறனாளிகளுக்கான நெசவு பயிற்சி! நைட்டா அதிகாரி பிரகாஷ் நேரடி விஜயம்!!
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனையில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுவரும் நெசவுப் பயிற்சியை தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்( NAITA) அம்பாறை மாவட்ட பரிசோதகர் கே .செல்வபிரகாஷ் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டார்.
அச்சமயம் ஒளிரும் கரங்கள் (Raising Hands)அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் விசேட தேவையுள்ள பிள்ளை நல அமைப்பின்(Disabled child care) தலைவருமான ரி. இளையராஜா சமூகமளித்திருந்தார்.
அங்கு நடைபெறும் நெசவுப் பயிற்சியை பார்வையிட்டு திருப்தி தெரிவித்தார்.
பயிலுனர்களுக்கு மாதாந்தம் 7500 ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னார்.
போதனாசிரியர்களுக்கான கொடுப்பனவை சமூக செயற்பாட்டாளர்கள் தனவந்தர்கள் முன்வந்து உதவினால் புண்ணியமா கும் என்றும் சொன்னார்.
கிழக்கு மாகாணத்தில் கல்முனையில்
"ஒளிரும் கரங்கள்" Raising Hands நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் ஒன்று கடந்த (10) செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டமை தெரிந்ததே.
அடுத்த நிலையம் வெகு விரைவில் வாகரையில் திறந்து வைக்கப்படவிருக்கிறது.
தற்போது இப் பயிற்சி நிலையத்தில் அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான பிரதேசங்களில் இருந்து 30 மாற்றுத் திறனாளிகள் இணைந்துள்ளனர்.
No comments