Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருதில் முஸ்லிம் திணைக்களத்தினால் பேரீச்சம் பழங்கள் விநியோகம்!!




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்  இவ்வாண்டு (2026) நோன்புக்காக வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (03) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் யூ.எல். முஹம்மட் றிபாஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட 16 பள்ளிவாசல்களுக்கு இப் பேரீச்சம் பழங்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாசலின் தலைவர் ஏ.எம். ஜௌபர் பேரீச்சம் பழங்களைப் பெற்றுக் கொள்வதையும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். றசீட் உட்பட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments