ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.
ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.
செல்வி வினாயகமூர்த்தி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம். புதன்கிழமை (11 ) ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் உதுமாலெப்பை ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் ஆ.தர்மதாஸ உதவி பிரதேச செயலாளர் பிரதித்தவிசாளர், மற்றும் கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச சபை செயலாளர் ,பிரதேசசபை உறுப்பினர்கள்,திணைக்கள தலைவர்கள் , எனப்பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இங்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திகள், கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆராயப்பட்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்வி ,சுகாதாரம், குடிநீர் பிரச்சினை, வீதி புனரமைப்பு, போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் விரைவில் இதற்கான தீர்வுகள் மக்களுக்கு சென்றடைய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.அத்துடன் 2026ம் ஆண்டுக்கான திட்ட வரைபுகளும் முன்மொழியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments