Column Left

Vettri

Breaking News

பொலிஸ் பொதுமக்கள் ஆலோசனைக்குழு -அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல சந்திப்பு




 இன நல்லிணக்கம், பொதுமக்கள், தொடர்பாடல்  போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்லவிற்கு   கல்முனை தலைமையக  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட  பொலிஸ் ஆலோசனை குழு  உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(22) மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றதுடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சிறு கலந்துரையாடல் ஒன்றினை பொலிஸ் ஆலோசனை குழு  உறுப்பினர்களுடன் மேற்கொண்டார்.

இதன் போது அங்கு கருத்து தெரிவித்த அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் 

எமது இலங்கை பொலிஸ் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலுக்கமைய  ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தில் உள்ள சமூக பொலிஸ் பிரிவுடன்  ஆலோசனைக்குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளன.இது தவிர கல்முனை பிராந்தியத்தில் போதைப்பொருள் பாவனை, வீடு உடைப்பு, உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் உரிய தகவல்களை மக்கள் ஊடாக சரியாக கிடைக்கப்பெற்றால்  அவ்வாறான பிரச்சினைகள் உடனடியாக எம்மால் தீர்க்க முடியும்.

பொலிஸ் ஆலோசனை குழுக்கள் ஊடாக பல்வேறு செயற்திட்டங்களை இலங்கை பொலிஸ் முன்னெடுத்துள்ளது. அத்துடன் கல்முனை சமூக பொலிஸ் பிரிவுடன் இணைந்து ஆலோசனை குழு சரியான வினைத்திறனுடன் இயங்குவதை தற்போது என்னால் காண முடிகின்றது.எனவே பல்வேறு செயற்திட்டங்களை இக்குழுவின் ஊடாக முன்னெடுக்க முடியும் என நம்புகின்றேன். என்றார்.


மேற்குறித்த நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி உட்பட சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கு கருத்து தெரிவித்த கல்முனை தலைமையக  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட  பொலிஸ் ஆலோசனை குழு  உறுப்பினர்கள் 

 
கல்முனை தலைமையக பொலிஸ்  நிலைய பிரிவுக்குள் காணப்படும் குற்றச் செயல்களைக் குறைத்து  பொலிசாரின் கடமைகளை இலகுபடுத்தும்  பொருட்டும்  பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவும்  தேவையான ஆலோசனைகளை எமது  ஆலோசனைக்குழு வழங்குகின்றது. இங்கு கல்முனை பொலிஸ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. .இப்னு அஸார்  உட்பட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி உட்பட சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட்  தத்தமது ஒத்துழைப்புக்களை எமது ஆலோசனை குழுக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

போக்குவரத்துச் சட்டம் மற்றும் சுற்றாடல் மாசுபடுவதை தடுத்தல்   தொடர்பில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டிய அக்குழுவினர்   வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றுவது தொடர்பிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பிலும் பொலிசாரினால் கையாளக்கூடிய ஏனைய பல்வேறு விடயங்களை செயற்படுத்த ஆலோசனைகளை வழங்குவது தொடர்பிலும் தெளிவுபடுத்தினர்.

விசேடமாக  சட்டம்  ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு ஏனைய பொலிஸ் நிலையங்களின் பொலிசாரின் ஒத்துழைப்புடன் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளம்கண்டு தண்டனை வழங்கல், விஷேட போக்குவரத்து வழிமுறைகளை கையாளுதல், இரவு நேரங்களில் தேவையற்ற முறையில் வீதிகளில் கூடியிருப்பவர்கள் மற்றும் உலாவித் திரிபவர்கள் தொடர்பில் விஷேட கண்காணிப்பை செலுத்துதல் , சிரமதான நிகழ்வுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக் கலந்துரையாடலில்  எடுக்கப்பட்டன.

 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சுற்றுநிருபத்தின் பிரகாரம் குற்றச்செயல்களை தடுப்பது, போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்தல், சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்தல் போன்ற செயற்பாடுகளை நோக்காகக் கொண்டு, நாடு பூராகவும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தையும் மையப்படுத்தி பொலிஸ் சமூக சேவை ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.







No comments