அரசாங்கம் மக்களின் வரத்தினை பெற்ற அரசாங்கம். இந்த நிலையில் எதிர்கட்சியில் இருக்கின்றவர்கள் ஆட்சியினை வீழ்ச்சியடைய செய்யலாம் என சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா!!
ஆலையடிவேம்பு நிருபர்
வி.சுகிர்தகுமார் இந்த அரசாங்கம் மக்களின் வரத்தினை பெற்ற அரசாங்கம். இந்த நிலையில் எதிர்கட்சியில் இருக்கின்றவர்கள் ஆட்சியினை வீழ்ச்சியடைய செய்யலாம் என சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் பல வீதிகள் கொங்றீட் வீதிகளாக மாற்றம் பெற்று வருகின்றன.
இதற்கமைவாக வெள்ள காலத்தில் மிகவும் பாதிக்கப்படும் நாவற்காடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 17.83 மில்லியன் ஒதுக்கீட்டில் 530 மீற்றர் கொங்றீட் இடும் பணிகள் இன்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் அம்பாரை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் ஐ.எல்.அமீனுள் பெறி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர் ஆர்.ரதீசன் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரஜா சக்தி தலைவர் உள்ளிட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
இந்த அரசாங்கம் மக்களின் வரத்தினை பெற்ற அரசாங்கம். இந்த நிலையில் எதிர்கட்சியில் இருக்கின்றவர்கள் ஆட்சியினை வீழ்ச்சியடைய செய்யலாம் என சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். பாராளுமன்றத்தில் கூட ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆலோசனை வழங்காமல் ஆட்சியை வீழ்த்துவோம் என்பதையே பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்களது பகல் கனவு நிறைவேறாது என்றார்.
இதேநேரம் இங்கு கருத்து தெரிவித்த பொதுமகன் ஒருவர்
நீண்டகாலமாக வீதி பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் சொல்லொணா துயரங்களை எதிர்கொண்டு வந்தோம். ஆனால் தற்போதைய அரசு அதற்கான தீர்வைப்பெற்றுக்கொடுத்துள்ளது. அந்த வகையில் அரசுக்கு நன்றி கூறினார்.

No comments