Column Left

Vettri

Breaking News

வெபர் மைதான அபிவிருத்திக்கு 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு! பாராளுமன்ற உறுப்பினர் பிரபுவின் முயற்சி வெற்றி!!




( வி.ரி. சகாதேவராஜா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் பிரதான விளையாட்டு மைதானமான வெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திக்காக 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின் பேரில், கிழக்கு மாகாண ஆளுநரால்  இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிதி, மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் மெய்வல்லுனர் பயிற்சி மற்றும் கூடைப்பந்தாட்ட திடல் ஆகியவற்றை மேம்படுத்த பயன்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் மூலம் மாவட்ட இளைஞர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிப்பதுடன், பிராந்திய மட்டத்தில் போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் நலனை முன்னிறுத்தி தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

No comments

Subscribe Us