Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறையில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம்! மூன்று நாள் வேலைத்திட்டம் ஆரம்பம் 




சம்மாந்துறையில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம்! மூன்று நாள் வேலைத்திட்டம் ஆரம்பம் ( வி.ரி.சகாதேவராஜா) ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக "தூய்மையான நகரம் ஆரோக்கியமான வாழ்க்கை" என்னும் தொனிப்பொருளில் பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகம், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம், சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஆகிய இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எச்.எம்.காலித், எம்.ஆர்.ஆஷிக் முகம்மட், ஏ.சீ.எம்.நயீம், ஹாதிக் இப்றாகீம், சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார். இதன்போது அல் - அர்சத் மகா வித்தியாலயம், வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வும் இடம் பெற்றதுடன் வீரமுனை - 04, உடங்கா - 01, ஆகிய பிரதேசத்தில் சிரமதானமும் இடம் பெற்றது.

No comments