Column Left

Vettri

Breaking News

காரைதீவில் விளையாட்டு வீரர்கள் சுயமாக முன்வந்து கடற்கரை சுத்தம்  செய்தனர்.




காரைதீவில் விளையாட்டு வீரர்கள் சுயமாக முன்வந்து கடற்கரை சுத்தம் செய்தனர். ( வீ.ரி.சகாதேவராஜா) காரைதீவு விளையாட்டுக் கழகத்தினர் "பீச் கிளீன் அப் கம்பெயின்" (Beach clean up campaign) என்கின்ற தொனிப்பொருளில் சிரமதானத்தை மேற்கொண்டு காரைதீவு கடற்கரையை நேற்று சுத்தப்படுத்தினார்கள் . நடப்பு ஆண்டுக்குரிய கழகத்தலைவர் முன்னாள் தவிசாளர் வை .கோபிகாந்த் தலைமையில் இந்த சுத்தப்படுத்தும் சிரமதானம் சுயமாக முன்வந்த கழக வீரர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக கவனிப்பாரின்றி குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் குப்பைகளை இந்த இளைஞர்கள் அகற்றினார்கள். கிளின் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் விளையாட்டு கழகத்தின் வருட ஆரம்ப செயற்பாடாகவும் இது இடம் பெற்றது என கழகச் செயலாளர் ரி.பிரகிலன்( ஆசிரியர் )தெரிவித்தார்.

No comments