Column Left

Vettri

Breaking News

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஆலயங்களை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி வழங்கி வைப்பு




டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஆலயங்களை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி ! ( வி.ரி. சகாதேவராஜா) 2025 டித்வா சூறாவளி மூலம் ஏற்பட்ட பெரு வௌ்ளநிலைமை காரணமாக பாதிப்புற்ற அம்பாரை மாவட்டத்திலுள்ள ஆலயங்களுக்கு அவற்றை துப்பரவு செய்வதற்காக தலா ரூபா 25000/- பெறுமதியான நிதி உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக ஆலயடிவேம்பு பிரதேசத்தில் 05 ஆலயங்களுக்கும்,காரைதீவு பிரதேசத்தில் 05 ஆலயங்களுக்கும்,நாவிதன்வெளி பிரதேசத்தில் ஒரு ஆலயத்திற்கும் அந்தந்த பிரதேச செயலகங்களில் வைத்து பிரதேச செயலாளர்களான ஜி.அருணன், பி.திரவியராசா, திருமதி ரங்கநாயகி சசீந்திரன் உரிய ஆலய அறங்காவல் சபையினரிடம் உரிய காசோலைகள் நேற்று வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ,மற்றும் பிரதேச செயலகங்களின் செயலாளர்கள்,பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments