சம்மாந்துறை பிரதேச சபையின் வருட இறுதி ஒன்றுகூடல்
சம்மாந்துறை பிரதேச சபையின் வருட இறுதி ஒன்றுகூடல்
பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை பிரதேச சபையின் வருட இறுதி (Year End) ஒன்றுகூடல் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் புதன்கிழமை (31) பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மேலும், ஓய்வுபெற்ற உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஐ.எம்.இர்ஷாத்தினால் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு உரையும் வழங்கப்பட்டது.
இதன் போது ஓய்வு பெறும் மின்னியலாளர் எம்.வீ. சுபைதீன் மற்றும் காவலாளி கே.எல். அப்துல் கபூர் ஆகியோர்களுக்கு, பொன்னாடை அணிவித்து, நினைவுச் சின்னம் மற்றும் அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
No comments