Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறை பிரதேச சபையின் 𝟐𝟎𝟐6ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு




சம்மாந்துறை பிரதேச சபையின் 𝟐𝟎𝟐6ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பாறுக் ஷிஹான் சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் 𝟐𝟎𝟐6ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்ட, பின்னர் நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக உயிர்நீத்த படைவீரர்கள் மற்றும் இயற்கை அனர்த்தினால் உயிர் இழந்தவர்களுக்கும் இரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சத்தியபிரமாண உறுதிமொழியை வாசித்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சத்தியப்பிரமாணத்தை எடுத்துக்கொண்டதுடன், நிறைவாக தவிசாளரின் விசேட உரையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாத்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், பிரதேச சபையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

No comments