Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறையில் சுகாதாரப் பரிசோதனை-வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை




சம்மாந்துறையில் சுகாதாரப் பரிசோதனை-வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை பாறுக் ஷிஹான் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தினமும் சுகாதாரப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு விதி மீறிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய புதன்கிழமை (21) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட வாராந்த வர்த்தக நிலையப் பரிசோதனைகள் (Trade Inspection) முன்னெடுக்கப்பட்டன. இதன் போது 03 உணவகங்கள் மற்றும் 05 பலசரக்குக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டன. மற்றும் பொதுச் சுகாதார நடைமுறைகளை முறையாகப் பேணாத 03 நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றில் B-அறிக்கை (B report) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு தேநீர்க்கடைக்கு (Tea Shop) நீதிமன்றத்தினால் தற்காலிகமாக மூடுமாறு (Closing Order) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த நீதிமன்ற உத்தரவை சம்மாந்துறை பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) நேரடியாகச் சென்று நடைமுறைப்படுத்தினார். பொதுமக்களின் நலன் கருதி இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். எனவே, வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைச் சீராகப் பேணுவதை உறுதிப்படுத்துமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுள்ளார்.

No comments