முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி அனுசரணையின் வருமானம் குறைந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான குறைந்த பட்ச வசதிகளை வழங்குதல் எனும் வேலைத்திட்டத்தின் கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் வழங்கி வைக்கப்பட்டது...

ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி அனுசரணையின் வருமானம் குறைந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான குறைந்த பட்ச வசதிகளை வழங்குதல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 36 பேருக்கு ரூபா 889,560.00 பெறுமதியான கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் போன்றன திருக்கோயில் பிரதேச செயலாளர் T. கஜேந்திரன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் உதவிப் பிரதேச செயலாளர் R. சுவாகர் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வழங்கிவைக்கப்பட்டது...
குறித்த நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், சமூக சேவை பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை பிரிவின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
No comments