காபட் வீதி செப்பனிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!!
பாறுக் ஷிஹான்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன், கிழக்கு மாகாண சபையின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட I-Road திட்டத்தின் கீழ் வீதிகளை காபட் வீதி செப்பனிடும் பணியில், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இடை நிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது, இந்த பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் எலக்ட்ரிக்கல் வீதியை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் புதன்கிழமை ( 24) நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வி.வினோகாந்த், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் வீ.ஜெயசந்திரன், சம்மாந்துறை பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். முஸ்தபா, பள்ளிவாசல் நிர்வாகிகளான எம்.எச்.எம். பைரூஸ், எம். ஜலால் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments