Column Left

Vettri

Breaking News

கட்டுரை ஆழிப்பேரலைக்கு இன்று அகவை 21




ஆழிப்பேரலைக்கு இன்று அகவை 21 தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இரண்டு தசாப்தங்கள் கடந்த நிலையில், மற்றுமொரு பேரிடர் "தித்வா" என்ற பெயரில் இலங்கையை உலுக்கி இருக்கிறது. திக்வா பேரிடரின் உயிரிழப்புக்கள்680. எனினும் பாதிப்புகள் 4.1 பில்லியன் டாலர் என்று கணிப்பிடப்பட்டிருக்கின்றது . இருந்த போதிலும் ஆழிப்பேரலை சுமார் 35 ஆயிரம் பேரை காவு கொண்டது. இருந்தபோதிலும் இவ்வாறான பாதிப்பு ஏற்படவில்லை என்று புள்ளி விவரங்களிலிருந்து தெரிகின்றது . அதாவது ஆழிப்பேரலையை விட தித்வா பேரிடர் பேருடன் மூன்று மடங்கு பாதிப்பை இலங்கைக்கு தந்து விட்டு சென்றிருக்கின்றது. ஆழிப்பேரலை, பெயரில் இருக்கும் அழகியலைப் போல இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலைகள் கரையில் நிகழ்த்திவிட்டுச் சென்ற தாக்கங்கள் அழகியல் அல்ல, துன்பியல் அதிர்ச்சி அலைகள். கடலின் கீழ்மட்டத்தில் ஏற்படும் நிலநடுக்கம்தான் அலைகள் உயர எழுந்து கரைகளை விழுங்கும் ஆழிப்பேரலையாகிறது. அப்படி 2004 -ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேஷியா அருகே இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அலைகள் எழும்பி தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, இலங்கை, இந்தியா என அனைத்து தெற்காசிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவுகோலில் 9.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம்தான் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய நிலநடுக்கமாகப் பதிவு செய்யப்பட்டது. நிலநடுக்கம் உருவாக்கிய ஆழிப்பேரலை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களைக் காவு கொண்டது. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலைக்கு இன்று( 26) வெள்ளிக்கிழமை அகவை 21 ஆகின்றது. அதனையொட்டி உலகெங்கிலும் ஆழிப்பேரலை தின வைபவங்கள் நடாத்த பரவலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் சுமார் 35ஆயிரம் பேரைக் காவுகொண்ட ஆழிப்பேரலை அம்பாறை மாவட்டத்தில் மட்டும் அதிகூடிய 5000பேரைக்காவுகொண்டமை குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி கடலோரமெங்கும் ஆத்மார்த்த அஞ்சலி பிரார்த்தனை செலுத்த பொதுஅமைப்புகள் மற்றும் மக்கள் தயாராகிவருகின்றனர். இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 6400. தமிழகத்தில் மட்டும் 2758 பேர் இறந்தனர். வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் உப்பு அலைகள் அடித்துச்சென்றன. அது மட்டுமல்லாமல் 50 சதவிகிதம் அளவுக்கானப் பொருளாதார இழப்பீட்டையும் இலங்கை சந்தித்தது. சில அழியாத சுவடுகள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மனதை விட்டு அகலாமல் நினைவில் இருக்கும். அந்த ஆழிப்பேரலை சுவடுகளுடன் தித்வா பேரிடர் சுவடுகளும் மனித மனங்களில் ஊழி உள்ளவரை அகலாதிருக்கும் எனலாம். வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்

No comments