சமூக வலைத்தளம் ஊடாக நுகர்வோருக்கு விழிப்புணர்வு
சமூக வலைத்தளம் ஊடாக நுகர்வோருக்கு விழிப்புணர்வு
பாறுக் ஷிஹான்
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டமையால் பலர் (Generator) மின்தோற்றி கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகின்றது.
தாங்கள் கொள்வனவு செய்யும் மின்சார (இலத்திரனியல்-Electrical) பொருட்கள் அனைத்துக்கும் குறைந்து 6 மாத காலம் உத்தரவாதம் அல்லது கட்டுறுத்து (warranty) வழங்குவதுடன் விற்பனை செய்யும் நிறுவனத்தின் (நிறுவனத்தின் பெயர், திகதி,பொருளின் தன்மை,நிறுவன விலாசம்,பற்றுச்சீட்டு இலக்கம் பேன்ற) உத்தியோக பூர்வ பற்றுச்சீட்டு (bill) வழங்க வேண்டும். மீறும் பட்சத்தில் 2003ம் ஆண்டு 9ம் இலக்க நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சட்டத்தின் கீழ் குறித்த வியாபார நிறுவனத்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
முறைப்பாடுகள் அல்லது புகார்
தூரித இலக்கம்- 1977
அல்லது
எழுத்து மூலம் முறைப்பாடு செய்ய
மாவட்ட பொறுப்பாதிகாரி
நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபை
மாவட்ட செயலகம்
(உரிய மாவட்டத்தின் பெயர்)
பதிவுத் தபால் ஊடாக அனுப்ப வேண்டும் என நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபை புலன் விசாரனை அதிகாரி இஷட்.எம் ஸாஜீத் அறிவித்தல் விடுத்துள்ளார்.
அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் மின்தோற்றி (Generator) மாபியா நடக்கின்றது.ஓட்டமாவடி, சாய்ந்தமருது, காத்தன்குடி, பகுதிகளில் ஒரே அளவுடைய மின்தோற்றி (Generator) பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இந்த விற்பனையினை பொதுமக்கள் மோசடி என்று கூறி வருகின்றார்கள்.
சாய்ந்தமருதிலிருந்து மருதமுனை வரை,
1. Navigator Generator (3.0KV - Made in China, Price 115,000 up to 140,000lkr)
2. Covax Generator (3.0KV - Made in China, Price 148,000 up to 180,000 lkr)
3. Super Tiger (900W - Made in China, Last Price 38,000 up to 42,000 lkr)
காத்தன்குடியில்,
1. Navigator Generator (3.0KV - Made in China, Price 75,000 lkr)
2. Super Tiger (900W - Made in China, Last Price 17,500 lkr
ஓட்டமாவடியில்,
1. Navigator Generator (3.0KV - Made in China, Price 62,250 up to 70,000 lkr)
2. Super Tiger (900W - Made in China, Last Price 16,700 up to 20,000 lkr)
ஓட்டமாவடி வியாபாரி ஒருவர் சொன்னார் தம்பி இந்த Navigator Generator (3.0KV) சென்ற கிழமை இதன் விலை 48,000 தொடக்கம் ஆகக் கூடியதாக 52,000 வரைதான் இருந்தது இந்த கிழமையிலிருந்துதான் 62.250 ருபாய்களுக்கு மேல் விற்க்கப்படுகிறது என்றார்.
இது தவிர மெழுகு திரியும் கட்டுப்பாட்டு விலை இன்றி அதிக விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
No comments