Column Left

Vettri

Breaking News

மலையகத்தில் முகாமிட்டு இ.கி.மிசன் சுவாமி நீலமாதவானந்தா ஜீ குழுவினர்  முகாம் மக்களுக்கு அடிப்படை உதவிகள்!




மலையகத்தில் முகாமிட்டு இ.கி.மிசன் சுவாமி நீலமாதவானந்தா ஜீ குழுவினர் முகாம் மக்களுக்கு அடிப்படை உதவிகள்! ( வி.ரி.சகாதேவராஜா) மலையகத்தில் குறிப்பாக பசறை லுணுகல பகுதியில் முகாமிட்டுள்ள மட்டக்களப்பு இ.கி.மிசன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையிலான குழுவினர், அங்கு வெள்ளத்தினாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்டு அகதிமுகாம்களில் வாழும் மக்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்குவதோடு, ஆறுதல் கூறியும் வருகின்றனர். கடந்த மூன்று தினங்களாக சுவாமி தலைமையிலான குழுவினர் அங்கு முகாமிட்டு இதர சேவைகளையும் வழங்கி வருகின்றார்கள். மேலும், இரண்டு தினங்கள் அங்கு தங்கி இருந்து முகாம்களில் வாழும் மக்களை சந்தித்து உளவள ஆற்றுப்படுத்தல்களை வழங்குவதோடு அடிப்படை நிவாரண உதவிகளையும் வழங்க உள்ளனர். "இரு வேறுஅகதி முகாம்களில் உள்ள சுமார் 300 குடும்பங்களை சந்தித்து பேசினோம். அவர்களது சோகக் கதைகள் சொல்லி மாளாது. சுமார் 15 குடும்பங்கள் வீடு வாசல் உறவுகள் எதுவுமின்றி நிர்க்கதியாக உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கை மற்றும் வலிகள் ஆழமானவை" என்று சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் இன்று (4) வியாழக்கிழமை கூறினார்.

No comments