Column Left

Vettri

Breaking News

ஆரம்ப சுகாதார பராமரிப்புக்கு தேவையான வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!!




 ஆரம்ப சுகாதார பராமரிப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசு உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்திச் அபிவிருத்திச் சங்கத்துடன் நிதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டுள்ளது.

தொற்றல்ல நோய்களைத் தடுத்தல் மற்றும் முகாமைத்துவம், முதியோர்களுக்கான பராமரிப்பு உதவிகள், சமூக மட்டச் சேவைகளைப் பலப்படுத்தல் மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய அவசர சுகாதார நிலைமைகளுக்கு மீட்சித்திறனைக் கட்டியெழுப்புவதல் உள்ளிட்ட சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில், குறித்த கருத்திட்டம் 2024 தொடக்கம் 2028 வரையான காலப்பகுதியில் இலங்கையில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் அமுல்படுத்தப்படும்.

களநிலைப் பணியாளர்கள் (குடும்பநல உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு தாதியர் மற்றும் கண்காணிப்புக் குழு) இற்கான போதியளவு போக்குவரத்து இன்மையால் இக்கருத்திட்டத்தில் அடையாளங் காணப்பட்ட தீர்மானம்மிக்க தடையாக அமையும்.

அதனால், வீட்டுமட்டத்திலான பராமரிப்பு மற்றும் சமூகத் தொடர்புகளை விரிவாக்கம் செய்தல், களநிலை ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்தல், சிகிச்சைக் கழிவுகளைப் பாதுகாப்பாகவும் சரியான நேரத்தில் ஏற்றிச் செல்வதை உறுதிப்படுத்துவதற்கான போக்குவரத்து இயலுமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வாகனங்களை கீழ்க்காணும் வகையில் பெறுகை செய்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments