ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது
பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய சந்தேக நபரை இன்று (18) மாலை கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை பௌஸ்மாவத்தை வீதியில் மலையார் வீதிக்கு திரும்பும் சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது இவ்வாறு ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைதானார்.
கைதானவர் 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் என்பதுடன் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 1 கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இக்கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகேவின் தலைமையிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments