Column Left

Vettri

Breaking News

பிரஜா சக்தி குழுக்களின் தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வும் அவர்களுக்கான பயிற்சி செயலமர்வும்




பிரஜா சக்தி குழுக்களின் தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வும் அவர்களுக்கான பயிற்சி செயலமர்வும் ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் இலங்கையில் கிராமப்புறங்களில் நிலவும் வறுமையை ஒழித்து, சமூகங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தேசிய வேலைத்திட்டமான 'பிரஜா சக்தி குழுக்களின் தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வும் அவர்களுக்கான பயிற்சி செயலமர்வும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (12) நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் ஆகியோர் கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தனர். நாட்டின் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் அனைத்து மக்களையும் சமூகக் கட்டமைப்போடு இணைத்து, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துதல் எனும் கோட்பாட்டோடு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது 'மக்களின் சக்தி' அல்லது 'சமூக சக்தி' என்பதே ஆகும். நாடு முழுவதும் உள்ள 14,000 கிராம அலுவலர் பிரிவுகளிலும் சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டு, அடிமட்ட மக்களின் பங்களிப்புடன் தேவைகளைக் கண்டறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

No comments