Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருது பொலீஸ் நிலைய உத்தியோகத்தர் களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு




சாய்ந்தமருது பொலீஸ் நிலைய உத்தியோகத்தர் களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு பாறுக் ஷிஹான் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு செயலமர்வு சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையில் இன்று (20) சாய்ந்தமருது பொலீஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பொறுப்பதிகாரி கேரத் வழிகாட்டலில் இவ் நிகழ்வு இடம்பெற்றது. இவ் விழிப்புணர்வு செயலமர்வின் பிரதான வளவாளராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரி எம்.எச்.எம் றிபாஜ் அத்துடன் புலனாய்வு அதிகாரிகளான எம்.எம்.எம் இஷட்.எம் ஸாஜீத் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இதன் போது நூகர்வோர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள்,பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்பந்தமான விரிவுரை வழங்கப்பட்டது.

No comments