Column Left

Vettri

Breaking News

டித்வா புய‌ல் -ஊடகவியலாளர்களுக்கு நிதியுதவி அளித்த ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கட்சி




டித்வா புய‌ல் -ஊடகவியலாளர்களுக்கு நிதியுதவி அளித்த ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கட்சி பாறுக் ஷிஹான் நாட்டின் பல்வேறு பகுதிகளை தாக்கிய டித்வா புய‌ல் அன‌ர்த்த‌ம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. இதற்கமைய இன்று அம்பாறை மாவட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு டித்வா புய‌ல் அன‌ர்த்த‌ம் தொடர்பில் பொதுமக்களை விழிப்பூட்டும் செய்திகளை ஊடகங்கள் வாயிலாக வெளியீட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நிதியுத‌வி கல்முனையில் அமைந்துள்ள ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைமை காரியால‌ய‌த்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. குறித்த அனர்த்தம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ செய்திக‌ளை திர‌ட்டும் ப‌ணியில் பாதிப்புற்ற‌ சில‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள் இனங்கண்டு ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் குறித்த நிதியுத‌வியை அவர்களுக்கு வ‌ழ‌ங்க‌ தீர்மானித்திருந்தது.அத்துடன் அவர்களை கௌரவப்படுத்தி புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் முஸ்ன‌த் முபாற‌க் செயலாளர் எம்.எம். இர்பான் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் முபாற‌க் முப்தி உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.மேற்படி நிகழ்வு ஶ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரசின் வருடாந்த நிர்வாக சபை பொதுக்கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments