இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து கவனம் செலுத்துங்கள்- எம்.பி.ரவிகரன்!
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில்( 12)இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலுக்கு எதிராக மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியினையடுத்து இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய இழுவைப்படகுகளின் அடாவடிச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு நிலமைகளைக் கருத்திற்கொண்டு, இந்தப் பிரச்சினை தொடர்பில் உரிய கவனஞ்செலுத்துமாறும், உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.

No comments