Column Left

Vettri

Breaking News

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு!!




 நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (11) மாலை 4:00 மணி முதல் நாளை (12) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது பதுளை, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு பொருந்தும்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments