இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் திருக்கோவிலில் நடந்த கவனயீர்ப்பு.
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் திருக்கோவிலில் நடந்த கவனயீர்ப்பு.
(வி.ரி.சகாதேவராஜா)
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக இன்று (10) புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
கவனயீர்ப்பில் சங்கத்தின் உபதலைவி கி. கலைவாணி, செயலாளர் ரஞ்சனா தேவி, பொருளாளர் சுனித்திரா தேவி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஆலோசகருமான தா.பிரதீபன் உள்ளிட்டவர்களும் பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்
No comments