மலையக மக்களுக்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து நிவாரணம்
மலையக மக்களுக்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து நிவாரணம்
ஆலையடிவேம்பு நிருபர்
வி.சுகிர்தகுமார்
வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் ஆலோசனைக்கு அமைவாக இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் பிரதேச சமூக ஆர்வலர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ராம் கராத்தே சங்க மாணவர்கள் என பலரது பங்கு பற்றுதலுடன் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பணிக்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமூக அமைப்புக்கள் ஆலயங்கள் விளையாட்டுக்கழகங்கள் பல்வேறு தனவந்தர்கள் புலம்பெயர் உறவுகள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் சிறுவர்கள் என பலரும் பாரிய உதவியினை வழங்கி இருந்தனர்.
இவ்வாறு பலரதும் பங்களிப்போடு சேகரிக்கப்பட்ட மிகப்பெறுமதியான நிவாரணப்பொருட்களை பார ஊர்த்தி மூலம் மலையகத்திற்கு கொண்டு சென்ற நிவாரணப்பணிக்குழுவின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து அவர்களிடம் நேரடியாக கையளித்தனர்.
நிவாரணப்பொருட்களை பெற்றுக்கொண்ட பாதிக்கப்பட்ட உறவுகள் பொருட்களை வழங்கி வைத்த அத்தனை மக்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
No comments