Column Left

Vettri

Breaking News

ஒல்லிக்குள மக்களுக்கு உதவும் பொற்கரங்கள் உதவி




ஒல்லிக்குள மக்களுக்கு உதவும் பொற்கரங்கள் உதவி (வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக சமூக சேவகர் விசு கணபதி பிள்ளையின் உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (12) மண்முனை ஒல்லிக்குளம் கிராம 70 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகளும், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும். வழங்கி வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட உதவும் பொற்கரங்கள் அமைப்பின் இணைப்பாளர். குணராஜா கணபதிப்பிள்ளையின் ஏற்பாட்டில். ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் என். சௌவியதாசன், ஓய்வுபெற்ற உதவிக் கல்வி பணிப்பாளர் கண. வரதராஜன். சமூக சேவகர் திலகன். சமூக சேவகர் திருமதி சுரேஷ்குமார் சகாயநாயகி. ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொதிகளை மக்களுக்கு கையளித்திருந்தனர். இற்க்கான நிதி உதவியை உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான திரு விசு கணபதி பிள்ளை அவர்களுடன் இணைந்து. நியூசிலாந்தில் வசிக்கின்ற. கனிஷ்ரராணி தம்பியப்பா ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உதவும் பொற்கரங்கள் அமைப்பின் நிவாரண பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.பணிகளுக்கான பூரண ஒத்துழைப்பை பெரியநீலாவணை நெக்ஸ் ரெப் இளைஞர்கள் செய்து வருகின்றனர்

No comments