இலங்கை நாட்டிற்கு கராத்தே துறையில் பெருமை சேர்த்த அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்த தின விசேட நிகழ்வு
இலங்கை நாட்டிற்கு கராத்தே துறையில் பெருமை சேர்த்த அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்த தின விசேட நிகழ்வு
ஆலையடிவேம்பு நிருபர்
வி.சுகிர்தகுமார்
இலங்கை நாட்டிற்கு கராத்தே துறையில் பெருமை சேர்த்த அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்த தின விசேட நிகழ்வும் சிரேஸ்ட கறுப்பு பட்டி வீரர்கள் கலந்து கொண்ட பயிற்சி பட்டறையும் சிகான் கேந்திரமூர்த்தி அவர்களுக்கான விசேட கௌரவிப்பும் ராம் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில்; இன்று (17) நடைபெற்றது.
இலங்;கை கராத்தே சம்மேளனத்தின் இரண்டு முறை தலைவராகவும், ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் பிரதம போதனாசிரியராகவும்;, சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்து கராத்தே துறைக்கு பல்வேறு பணிகளை ஆற்றிய அன்னாரது பிறந்ததின நிகழ்வு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராம் கராத்தே டோ சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.கேந்திரமூர்த்தியின் ஒழுங்கமைப்பில் கிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் ஆலோசகர் கே.சங்கரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.சங்கரலிங்கத்தின் தலையுரையோடு ஆரம்பமான நினைவு பிறந்த தின நிகழ்வில் கேக் வெட்டப்பட்டது.
பின்னர் அவர் தொடர்பான நினைவு பேருரைகள் இடம்பெற்றதுடன் கராத்தே துறையில் நீண்ட கால சேவையாற்றிவரும் சிகான் கேந்திரமூர்த்தி அவர்களுக்கான விசேட கௌரவிப்பினை கிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் ஆலோசகர் கே.சங்கரலிங்கம் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் கராத்தே துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆற்றிய பணிகள் தொடர்பில் நினைவு கூர்ந்து பலர் உரையாற்றினர்.
இறுதியாக ராம் கராத்தே டோ சங்கத்தின் செயலாளர் சென்சி எம்.பி.செயினுலாப்தீனால் நன்றி கூறப்பட்டது.
No comments