ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 2026ம் ஆண்டுக்குரிய புதிய தலைமைத்துவ நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 2026ம் ஆண்டுக்குரிய புதிய தலைமைத்துவ நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு
பாறுக் ஷிஹான்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 12 ஆவது தலைமைத்துவ நிர்வாக சபை பொதுக்கூட்டம் கட்சித் தலைமையகத்தில் பொதுச்செயலாளர் இர்பான் முஹிதீன் தலைமையில் கூடியது.
இதன் போது பின்வருவோர் 2026ம் ஆண்டுக்குரிய புதிய தலைமைத்துவ நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்: முஸ்னத் முபாறக், பொதுச் செயலாளர்: இர்பான் முஹிதீன், பொருளாளர்: ஏ. எம். ஏ. அத்னான், அவை தலைவர் (சேர்மன்): முஹம்மத் முஜாஹித் ,உதவித் அவைத்தலைவர்: ஏ.எம். ஸமாம் ,உப தலைவர்கள்: எம். முர்ஷித் ,எம். ஸாஹித், எம்.எஸ்.எம் சதீக் , சசி குமார், உதவி பொருளாளர்:எம்.பைசல், தேசிய அமைப்பாளர்:எம்.எம். மரீர்,
ஊடக பேச்சாளர்: முபாறக் முப்தி
மகளிர் விவகார இணைப்பாளர்கள்: திருமதி ஹனான், பாத்திமா சிஹாமா ,பாத்திமா பர்வின், பெண்கள் விவகார இணை இணைப்பாளர்: நந்தினி, எஸ். பத்மாவதி, உள்ளிட்டோரும்
மேலதிக செயற்குழு உறுப்பினர்களாக ஏ.எம்.எம்.றபீக், ஏ.எல்.எம். அன்சார் (முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்), எம்.ஆர்.எம் றஷாத், ஜெனீட்டா குமார், ஏ.எம். ஸக்கீ, எஸ். எல். ரியாஸ் ஆகியோர் சபையோரால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என ஊடகங்களுக்கு இன்று (17) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் கட்சியின் ஊடக பேச்சாளர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.
No comments