பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பேரிடரால் 211 பேர் காணமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 473,138 குடும்பங்களைச் சேர்ந்த 1,637,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 26,103 குடும்பங்களைச் சேர்ந்த 82,813 பேர் இன்னும் 847 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர்களால் 5,713 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments