Column Left

Vettri

Breaking News

மத்தியஸ்த சபைகள் தொடர்பாக  கல்முனை பிராந்தியத்தில்    3 விழிப்புணர்வு  செயலமர்வுகள் முன்னெடுப்பு




மத்தியஸ்த சபைகள் தொடர்பாக கல்முனை பிராந்தியத்தில் 3 விழிப்புணர்வு செயலமர்வுகள் முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் மத்தியஸ்த சபைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகள் மூன்று கட்டங்களாக இன்று சிறப்பாக நடைபெற்றன. கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார் வழிகாட்டலில் கல்முனை விதாதா வள நிலையத்தில் நடைபெற்றது.இதன் போது விதாதா வள நிலைய விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.பி.ஜெயந்தன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.றிஸ்வானின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமானது. குறித்த இச்செயலமர்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டனர். இதன் போது கல்முனை பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த சபைக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் பாறுக் ஷிஹானின் நெறிப்படுத்தலில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த சபைக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம். அன்பாஸ் வளவாளராக கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கினார். மத்தியஸ்த சபைகள் என்றால் என்ன அதனால் கிடைக்கும் நன்மைகள், மத்தியஸ்த சபைகளால் ஆற்றுப்படுத்தப்படும் பிணக்குகளை எவ்வாறு கையாள்வது, தீர்க்கப்பட்டமைக்கான சான்றிதழ் மற்றும் தீர்க்காமைக்கான சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாகவும் மத்தியஸ்த சபைகள் தொடர்பான ஏனையவர்களுக்கு தெரியப்படுத்துமாறு செயலமர்வில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. =-=-=-=-=-=- இதே வேளை மத்தியஸ்த சபைகள் தொடர்பாக தெளிவு படுத்தும் மற்றுமொரு செயலமர்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றன. இச்செயலமர்வானது கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் ஆலோசனைக்கமைய நடைபெற்றது. இதன் போது கல்முனை சாய்ந்தமருது பெரிய நீலாவணை சம்மாந்துறை சவளக்கடை உட்பட பொலிஸ் நிலையங்களின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பொலிஸ் உத்திகோகத்தர்கள் கலந்து கொண்டனர். இச்செயலமர்வில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுவின் பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ வாஹிட் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். -=-++++++++++++++++ மேலும் மத்தியஸ்த சபைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு கல்முனை இஸ்லாமபாத் கிராம அபிவித்தி சங்க கட்டடத்தில் நடைபெற்றத.இச்செயலமர்வானது கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார் வழிகாட்டலில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.ஜாபீர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச. ஜெமில் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றன. இதன் போது கல்முனை பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த சபைக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் பாறுக் ஷிஹானின் நெறிப்படுத்தலில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த சபைக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம். அன்பாஸ் வளவாளராக கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கினார். இதன் போது இச் செயலமர்வில் அதிகளவான மாதர் சங்க உறுப்பினர்கள் வெளிக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments