பிரஜாசக்தி' வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில்.....
ஜே.கே.யதுர்ஷன்
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உதித்த கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் 'பிரஜாசக்தி' வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கிராம சேவகர் பிரிவுகளுக்கான குழுக்களின் தலைவர்கள், செயளாலர்கள் ,மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தருக்கும் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் 10.11.2025 பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
அம்பாறை மாவட்ட கரையோர பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கெளரவ நாடாளுமன்ற உறுப்பினருமான Athambawa Aboobucker அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் அவர்களின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் லாகுகல பிரதேச சபை உதவி தவிசாளருமாகிய திரு.ரவீந்திர குணவர்தன அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந்த் ,,சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர் திரு.ம.அரசரெத்தினம் தேசியமக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர் திரு.சுதா ,கிராம நிர்வாக உத்தியோகத்தர் திரு S.சுயகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தேசிய மக்கள் சக்தி திருக்கோவில் பிரதேச கிளை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்


No comments