Column Left

Vettri

Breaking News

வெளிநாட்டு சுற்றிலாப்பெண்ணுக்கு ஆண் உறுப்பை காட்டியவர் கைது!?




ஜே.கே.யதுர்ஷன்

தம்பிலுவில் 

கடந்த 2025/10/25 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை அன்று பொத்துவில் அறுகம்பை குடாப்பகுதியில் இருந்து முச்சக்கரவண்டியில் மட்டக்களப்பு பாசிக்குடா நோக்கி சென்ற வெளிநாட்டு பெண் சுற்றிலாப்பிரயாணியிடம் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பொலிஸ்பிரிவுக்குட்ப்பட்ட தாண்டியடி பொத்துவில் பிரதானவீதியில் வைத்து ஒருநபர் அவரது ஆண்உறுப்பை காட்டிய ஆபாசமாக பேசி அவரை தவரான சம்பவத்திற்கு அழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது....

இச் சம்பத்தில் சம்மந்தப்பட்ட சந்தேக நபரை திருக்கோவில் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் அவர்களுக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைவாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்டப்பட மருதமுனை பகுதியில் வைத்து 2025/11/16 மாலை 06.45Pm மணியளவில் கைது செய்துள்ளனர்....

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மாத்தளைப்பகுதியை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு களூவாச்சிகுடிப்பகுதியை வசிப்பிடமாக  கொண்டவராக 23வயதுடைய இளைஞர் என  ஆரம்பகட்ட விசாரனையில் தெரிவிக்கப்படுகின்றது...

மேலும் குறித்த கைது நடவடிக்கையானது கிழக்கு மாகாண பொலிஸ்மாஅதிபர் Mr.வருணஜெயசுந்த அவர்களின் கட்டளைக்கு அமைவாக அம்பாறைமாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் mr. Sujith Wedamulla அவர்களின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப்குமார அவர்களின் கண்காணிப்பில் பொதுவில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தயரெட்ண அவர்களின் மேற்பார்வையின் கீழ் திருக்கோவில் பொலிஸ்நிலையாபிரதம பொலிஸ்பரிசேதகர் Mr.பீரிஸ் தலைமையிலான குழுவினராக Ps.44061உதயராஜ் ,ps.73646விஜயகுமார்,Pc6494கஜந்தன் மற்றும் pc40252சதுர்ஜன்,Pcd80447விஸ்வாத் ஆகியோரினால் குறித்த கைது  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது...

இதன் போது சம்பவ தினமான 2025/10/25 திகதி அவர் அணிந்திருந்த ஆடை மற்றும்தலைக்கவசம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸ்சாரினால் கைப்பெற்றபட்டுள்ளது...

கைது செய்யப்பட்டவர் நீதி மன்றில் ஆஜயர் படுத்துவதற்காக மருத முனையில் இருந்து அழைத்துவரப்பட்டு  பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் ...

இது பற்றிய மேலதிக விசாரனை பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்...

No comments