21ஆம் திகதி இடம்பெறும் அரசுக்கு எதிரான பேரணியில் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் கட்சி தலைமையினால் எடுக்கப்படவில்லை!!
ஆலையடிவேம்பு நிருபர்
வி.சுகிர்தகுமார்
21ஆம் திகதி இடம்பெறும் அரசுக்கு எதிரான பேரணியில் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் கட்சி தலைமையினால் எடுக்கப்படவில்லை. இருப்பினும் கட்சி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு செயற்படுவோம் என என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் தெரிவித்தார்.
பொத்துவில் கோமாரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று இடம் பெற்ற அம்பாரை மாவட்ட ஊடகவியலயாளர் போரத்தின் கூட்டமொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அதிமேதகு ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட மலையக மக்களுக்கான சம்பள உயர்வை வரவேற்றுகின்றோம். இன்னும் அதிகமாக வழங்குவதில் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்களுக்கான உரிமை மற்றும் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எனும் ரீதியில் எனது கோரிக்கையாகவும் இருக்கின்றது

இதேநேரம் மலையகத்தில் உள்ள 5 தனியார் தோட்டக்கம்பனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அரச நிதியில் இருந்து சம்பள அதிகரிப்பை வழங்க முடியுமா எனும் கேள்வி எழுந்தமைதான் அங்கு சர்சையாக எழுந்துள்ளது. ஆனாலும் அவர்களது சம்பள உயர்வு வீட்டு வசதி சுகாதார வசதி வழங்கப்பட்டால் அதனை நாம் வரவேற்பதுடன் ஜனாதிபதி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்போம்.
அம்பாரை மாவட்ட ஊடகவியலயாளர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற ஒன்று கூடலில் கலந்து கொண்ட அவர் சங்கத்தின் நீண்டகால உறுப்பினரும் ஊடகவியலாளரும் பிரதான சுகாதாரப்பரிசோதகராக 35 வருடத்திற்கும் மேல் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற அப்துல் மலீக் அவர்களுக்கு; நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இதேநேரம் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கும் அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்திகளுக்கும் முன்னின்று செயற்படவுள்ளதாகவும் உறுதி அளித்தார்.
நிகழ்வில் சங்கத்தின் அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.
No comments