Column Left

Vettri

Breaking News

மதுபான விற்பனை செய்த சந்தேக நபர் கைது




 பாறுக் ஷிஹான்



போயா விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


புதன்கிழமை (5)  அம்பாறை மாவட்ட  ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை ஒன்றினை  பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியில் மேற்கொண்டிருந்தனர்.

 இதன் போது போயா தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரும்  மீட்கப்பட்ட மதுபான வகைகளும்  நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை  அறுகம்பே சுற்றுலாப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்த பொலிஸார்  ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான வகைகளை பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும்  இச்சோதனை நடவடிக்கையானது   கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில்    அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பதில் பொலிஸ் அத்தியட்சகர்   பிரதீப் குமாரவின் வழிகாட்டுதலின் அம்பாறை மாவட்ட   ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்   பிரியங்கர தலைமையிலான பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments