Column Left

Vettri

Breaking News

காரைதீவில் பட்டம் பெற்ற முதலாவது சித்த வைத்தியராக குகராணி தெரிவு.




 (வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவின் முதலாவது பட்டம் பெற்ற சித்த வைத்தியராக மருத்துவர் செல்வி கோணேஸ்வரன் குகராணி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ  பீடத்தில் பயின்று 2019 இல் பட்டம் பெற்று காரைதீவின் முதலாவது சித்த  மருத்துவ பட்டதாரியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் .

இவருக்கான பதவி  நியமனக் கடிதம் கடந்த வாரம் கொழும்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால்  கையளிக்கப்பட்டது.
 
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓந்தாச்சிமடம் ஆயுர்வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அங்கு அவர் நேற்று முன்தினம் கடமையை பொறுப்பேற்றுள்ளார்.


No comments