Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறை முச்சபைகளின் செயற்பாடுகள் சம்பந்தமான தெளிவூட்டல்!




 ( வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறையிலுள்ள நம்பிக்கையாளர் சபை,மஜ்லிஸ் அஷ்ஷூறா, ஐம்மியத்துல் உலமா ஆகிய மூன்று சபைகளை உள்ளடக்கிய முச்சபைகளின்   செயற்பாடுகள் சம்மாந்தமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய  திணைக்களங்களின் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு  (12) சம்மாந்துறை நம்பிகையாளர் சபைத் தலைவர் மெளலவி கே.எம்.கே.ஏ ரம்ஸீன் காரியப்பர் தலைமையில் சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம,அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் விடமுல்ல,சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர்,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா,இராணுவ,பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வில் சம்மாந்துறையில் சிறப்பாக இயங்கிவரும் வட்டியில்லா வங்கியின் நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கையாளர் சபையினால் செய்து வரும் உதவிகள் இனிவரும் காலங்களில்  நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் செயற்பாடுகள் சம்மந்தமாக தெளிவான விளக்கம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







No comments