கவிஞர் வில்சன் சுதாகரின் ஈழத்துச் சிறை எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா!!
வி.சுகிர்தகுமார்
கவிஞர் வில்சன் சுதாகரின் ஈழத்துச் சிறை எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா (12) மட்டக்களப்பு தமிழ்ச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் மற்றும் மகுடம் கலை இலக்கிய வட்டம் இணைந்து நடாத்திய இந்நூல் வெளியீட்டு விழா 62 ஆவது பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வுத்தொடராக இடம்பெற்றது.
சைவப்புலவரும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பேராசிரியை திருமதி புளோரன்ஸ் பாரதி கென்னடி கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் சு.சிவரெட்ணம் கலாநிதி பிரியா ஜெகதீஸ்வரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
நூல் நயவுரையினை கவிஞர் றியாஸ் குரானா வழங்க முதல் பிரதியை பிரபல தொழிலதிபர் லயன் ஆர்.லலித்குமார் பெற்றுக்கொண்டதுடன் வெளியீட்டு உரையினை மகுடம் மைக்கல் கொலின் வழங்கினார்.
தமிழ்தாய் வாழ்த்தை தமிழ்ச்சங்க உறுப்பினர் கு.விநாயகமூர்த்தி நிகழ்த்த வழங்க வரவேற்பு நடனத்தை பிரணவாலயா கலா மித்ர மாணவிகள் வழங்க வரவேற்புரையினை தமிழ்ச்சங்க துணைச் செயலாளர் திருமதி பிரியா கருணாகரன் ஆற்ற தலைமையுரையினை வி.றஞ்சிதமூர்த்தி நிகழ்த்த மற்றும் நூலாசிரியர் அறிமுகத்தை அதிபர் சதாசிவம் கார்த்தீபன் வழங்கினார்.

இதன் பின்னராக நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் முதல் பிரதியை பிரபல தொழிலதிபர் லயன் ஆர்.லலித்குமார் பெற்றுக்கொண்டார்.
இறுதியாக நூலாசிரியர் ஏற்புரையினை வழங்கியதுடன் வில்சன் சுதாகர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் உறுதுணையாக செயற்பட்ட நூலாசிரியரின் சகோதரர் பிரபல வர்த்தகர் வில்சன் சங்கர் தமிழ்ச் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் உள்ளிட்ட தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் இலக்கியவாதிகள் சமூக ஆர்வலர்கள் நூலாசிரியரின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் தமிழ்ச்சங்க துணைச் செயலாளர் இரா.பிரதீஸ்காந்த் நிகழ்ச்சித்தொகுத்து வழங்கினார்.
No comments