Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் மதன் நியமனம்!!




பாறுக் ஷிஹான்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் எப்.பி.மதன் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (29) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையினை அறிக்கை செய்து, புதிய சேவை நிலையத்துக்குரிய கடிதத்தினையும் பெற்றுக்கொண்டார்.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய வைத்தியர்  ஏ.பி.மசூத் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டதனையடுத்து வைத்தியர் எப்.பி.மதன் திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் மசூத் திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய காலப்பகுதியில் அவ்வைத்தியசாலை அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்புக்களை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments