வலுவான ஆரோக்கியம் சுறுசுறுப்பான வாழ்க்கை எனும் கருப்பொருளுக்கமைய தேசிய ஓய்வூதியர் தினவிழா!!
வி.சுகிர்தகுமார்
வலுவான ஆரோக்கியம் சுறுசுறுப்பான வாழ்க்கை எனும் கருப்பொருளுக்கமைய தேசிய ஓய்வூதியர் தினவிழா ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று(07) நடைபெற்றது.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஓய்வூதியர்களின் மாவட்ட இணைப்பாளர் சாலீப்தீன் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பறூஷா நக்பர் பிரதேச செயலக கணக்காளர் அரசரெத்தினம் கிராம நிருவாக அலுவலர் பரிமளவாணி சில்வெஸ்டர் ஓய்வூதிய அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறின் சித்தாரா மற்றும் சபீனா ஆலையடிவேம்பு பிரதேச ஓய்வூதியர் சங்க தலைவர் வா.குணாளன் செயலாளர் சிவன்செயல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசானது ஒக்டோபர் 8ஆம் திகதியை தேசிய ஓய்வூதியர் தினமாக பிரகடனப்படுத்தி தேசிய ரீதியில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து ஓய்வூதியர்களை கௌரவப்படுத்தி அவர்களின் உளவளம் மற்றும் வாழ்வில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட வழிசமைத்துள்ளது.
இதன் ஒரு நிகழ்வாகவே ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஓய்வுதியர்களை ஒன்றாக இணைத்து அவர்களுக்கான சுகாதார மற்றும் உளநலவிருத்தி தொடர்பான கருத்துரைகளை முன்வைத்ததுடன் அவர்களது கலை திறமைகளையும் வெளிக்கொண்டுவரும் களமாக இந்நிகழ்வை பய்னபடுத்தியது.
நிகழ்வில் சிறுமி ஒருவரின் நடனமும் இன்னும் பல கலைநிகழ்வகள் நடைபெற்றதுடன் ஓய்வூதிய சங்கத்தின் செயலாளரின் மவுத் ஓகன் மூலமாக வாசிக்கப்பட்ட தேசிய கீதத்துடன் நிறைவுற்றமை சிறப்பம்சமாக அமைந்தது.
No comments