கல்முனையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது!
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
கல்முனை மாநகரப் பகுதியில் இயங்கி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தனது முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு,(13) ஆம் திகதி மிகுந்த சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் விழாவை கல்முனை காரியாலயத்தில் கொண்டாடியது. இந்நிகழ்வு கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதிமுதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் முன்னெடுப்பில் இடம் பெற்றது.
விழாவின் பிரதம அதிதியாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் கோஸ்கலே விக்ரமசிங்க பங்கேற்றார்.
விஷேட அதிதிகளாக மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையகத்தின் ஜெனரல் லலீதாதீரே, ரஹ்மத் பவுண்டேசனின் தலைவர் ரஹ்மத் மன்சூர், திரு. அர்ஷாத் பாரூக், திரு. முகம்மது ஃபனூர், திரு. பிரதீப் ஜயசுந்தர, கல்முனை பிரதேச செயலாளர் அன்ஸார், மயோன் குரூப் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் ALFEA நிறைவேற்று சபை உறுப்பினர் எம்.றிஸ்லி முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து விழாவை சிறப்பித்தனர்.
மேலும், அம்பாறை மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தலைவர்கள், பணியக அதிகாரிகள், கல்முனை விஷேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி, மதகுருமார்கள், வர்த்தகர்கள், ஊர்ப் புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் உரையாற்றிய ரஹ்மத் மன்சூர் அவர்கள்,
“கல்முனை மாநகர எல்லைக்குள் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களக் காரியாலயம் சில காரணங்களால் மாற்றப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தை மீண்டும் கல்முனைக்குக் கொண்டு வர வேண்டும்” என பணிவுடன் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, அதற்கான மகஜரை அவர் அதிகாரப்பூர்வமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் கோஸ்கலே விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வு கல்முனை மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்திய அருமையான தருணமாக அமைந்தது.
No comments