Column Left

Vettri

Breaking News

நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை பொதுச்சந்தை மீண்டும் இன்று துப்பரவு !!




( வி.ரி.சகாதேவராஜா)

நாவிதன்வெளிப் பிரதேச சபைக்குட்பட்ட  நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை - 01 பொதுச்சந்தைக் காணி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று (3) புதன்கிழமை துப்பரவாக்கப்பட்டது.

 நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ. ரூபசாந்தன் மற்றும் செயலாளர்  பா.சதீஸ்கரன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக கிளீன் சிறிலங்கா Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் துப்பரவு செய்யப்பட்டது.

இதில் குறித்த பிரதேச சபை உறுப்பினரும் கலந்து கொண்டிருந்தார்.

பிரதேச சபையின் வளங்களுள் ஒன்றாகக் காணப்படும் இப்பொதுச்சந்தைக் காணியானது நீண்ட காலம் பராமரிப்பு இல்லாமல் பற்றைகளால் சூழப்பட்டிருந்ததுடன் சட்ட விரோத செயல்களுக்கு தளமாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments