நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றுவது எவர் மீதான பழிவாங்கலும் அல்ல!!
முன்னாள் ஜனாதிபதிகள் கைவிடும் அனைத்து சிறப்புரிமைகளையும் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த அரசாங்கம் தயார் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றுவது எவர் மீதான பழிவாங்கலும் அல்ல.
அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக நாட்டு மக்களுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை வேலைத் திட்டத்திற்கு இணங்க, பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் ஒரு அம்சமாகவே இதனைக் குறிப்பிட முடியும்.
அதிகாரங்களில் உள்ள சிலரும் தமது சிறப்பு ரிமைகளைப் பெற்று வாழ்கின்றனர். இந்த அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.நாட்டிலிருந்த அரசியல் கலாசாரத்தை நாம் நன்கு அறிவோம். அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ வீடு, வாகன அனுமதிப்பத்திரம், அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் எரிபொருள் கொடுப்பனவு ஆகியவற்றை நாம் தற்போது குறைத்துள்ளோம்.
No comments