Column Left

Vettri

Breaking News

காரைதீவில் சிறந்தமுதியோர் சங்கமாக கண்ணகி முதியோர் சங்கம் தெரிவு; நாளை அம்பாறையில் மாவட்ட போட்டிக்கான கூட்டம்!!




( வி.ரி. சகாதேவராஜா)

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு கிராம மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டியில் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகி முதியோர் சங்கம் சிறந்த கிராமிய முதியோர் சங்கமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது

இதனை காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன் கண்ணகி முதியோர் சங்கத் தலைவர் த.சிவானந்தராஜாவிடம் அறிவித்துள்ளார்.

இந்த சங்கம் மாவட்டமட்ட போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 அப்போட்டிக்கான ஒழுங்கமைப்புக் கூட்டம் நாளை (15)திங்கட்கிழமை அம்பாறை பிரதேச கேட்போர் கூடத்தில் ஒன்பது மணிக்கு நடைபெற உள்ளது.

 இதில் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் .
சர்வதேச முதியோர் தினத்தையொட்டி மாவட்ட சிறந்த கிராமிய முதியோர் சங்கம் மற்றும் சுய தொழில் முயற்சிகளை தேர்வு செய்தல் என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

No comments