Column Left

Vettri

Breaking News

இணைந்த கரங்கள் அமைப்பினால் பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு ஆரம்பிப்பு...




பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும்,பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டதர்க்கு இணங்க. வாகரை பிரதேசத்தில் உள்ள பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த(68) மாணவர்களுக்கும் மற்றும், கட்டுமுறிவு வித்தியாலயத்தை (17 )மாணவர்களும் இரு பாடசாலையை சேர்ந்த (85)மாணவர்களுக்கு எதிர்வரும் கல்விப் பொது சாதாரண தரத்தில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்பு ஆரம்பிப்பதிர்க்கான நிகழ்வு (12) பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் திரு.த.உதயகுமார். தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் ஆயித்தியமலை பாடசாலையின் அதிபர் து.வித்தியானந்தன், கட்டுமுறிவு பாடசாலையின் அதிபர் திரு.ஜீ.ஜீவனேஸ்வரன்.ஆசிரியர் திரு.க.நாகேந்திரன். மேலதிக கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான துலக்சன், ஜெயக்காந், காந்தன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments