Column Left

Vettri

Breaking News

தாகத்திற்கு தண்ணீர் வழங்கி தடம் பதிக்கும் தடம் அறக்கட்டளை! மரண வீட்டிற்கு 5 ஆயிரம் ரூபா அன்பளிப்பு






( வி.ரி.சகாதேவராஜா)

பாதயாத்திரை செல்வோருக்கு தாகத்திற்கு தண்ணீர் வழங்கி வரலாற்று தடம் பதிக்கும் அமைப்பாக தடம் அறக்கட்டளை திகழ்கிறது.

அது மட்டுமல்ல ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால் அங்கு தேவையான குடிநீர் வசதியுடன் 5 ஆயிரம் ரூபா பணமும் அன்றே அன்பளிப்பு செய்தும் வருகிறது.

அண்மையில் தாந்தா முருகன் ஆலய பாத யாத்திரை மேற்கொண்ட அடியவர்களுக்கு தண்ணீர்ப் போத்தல்கள் வழங்கி வைத்தனர்.

 பெரியகல்லாற்றை சேர்ந்த அவுஸ்திரேலியா வாழ் பரோபகாரி ரி. நிரஞ்சன்  தனது தாயின் நினைவாக " தடம் " அறக்கட்டளை எனும் அமைப்பை உருவாக்கி அதன் ஊடாக பல சமூக சேவையினை செய்து வருகின்றார்.

 தாந்தாமலை சிறி முருகன் ஆலயம் நோக்கி பாதபாத்திரை வந்த பத்தர்களுக்கு 5 ஆயிரம்  தண்ணீர் போத்தல்கள்  விநியோகம்  செய்தார் .
 மரணம் ஏற்படும்  வீடுகளுக்கு போதியளவு குடிநீர் , உதவிகள், பண தொகை 5000/= அத்தோடு கொட்டகைகள் , கதிரைகளையும் போன்றவற்றையும் இலவசமாக நீண்ட காலமாக தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார.

அத்தோடு  தனது " தடம் " அமைப்பின் ஊடாக  தரம் - 5 மாணவர்களுக்கான உதவி தொகை வழங்குதல் , வாழ்வாதார உதவிகள் , வறிய மாணவர்களுக்கு கல்விக்கான கொடுப்பனவுகள் , வறிய நோயுற்றவர்களுக்கான மருத்துவ உதவிகள் என பல உதவிகளைச்  செய்து வருகின்றமையும் குறிப்பிட தக்கதாகும்

No comments