நாவிதன்வெளி சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா!!
( வி.ரி.சகாதேவராஜா)
நாவிதன்வெளிப் பிரதேச சபையின் சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா நேற்று (2025.08.07) இடம் பெற்றது.
மாகாண நன்கொடை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் இக்கலாசார மண்டபக் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை தவிசாளர் இ. ரூபசாந்தன் நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி உதவியாளர் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கற்களை நட்டு வைத்தனர்.
திருமண வைபங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்படும் இம்மண்டபத்தின் விருந்துபசார நடடிக்கைக்காக புறம்பான வளாக மொன்றினை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ் அபிவிருத்திச் செயன்முறை இடம் பெறுகிறது.
No comments