வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சமுத்திர தீர்த்தோற்சவம் நாளை 09ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
தீர்த்தம் ஆடுவதற்காக தற்போது சுமார் ஆறாயிரம் அடியார்கள் ஆலய வளாகத்தில் வந்து சேர்ந்திருப்பதாக ஆலய வண்ணக்கர் சுதுநிலமே சுதா தெரிவித்தார்.
கடந்த 25 ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகிய இவ் வருடாந்த மகோற்சவம் ஆலயபிரதம குரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற்று வந்தது.
கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக 15 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று நாளை ஆகஸ்ட் மாதம் 09ஆம் தேதி சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெறுகிறது.
உற்சவ காலங்களில் போக்குவரத்து மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, தாந்தாமலை முருகன் ஆலயம் மற்றும் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவமும் நாளை சனிக்கிழமை காலை இடம்பெறும்.
No comments