Column Left

Vettri

Breaking News

கோமாரியில் கோர விபத்து. பலருக்கு பலத்த காயம். சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு!!




பாறுக் ஷிஹான்

பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்பாறை  அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் கோமாரி பகுதியில் இன்று(30) மாலை  கெப்பட்டிபொல பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற பேருந்தொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன் சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என  ஆரம்ப கட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்  வெலிமடை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய  நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்தில் சிக்கியவர்கள்  வெலிமடையில் இருந்து இன்று காலை பயணத்தை மேற்கொண்டு அம்பாறை தீகவாபி ராஜமாக விகாரைக்கு வருகை தந்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அங்கிருந்து பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திற்கு செல்லும் வழியில்  கோமாரியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  தெரிய வருகின்றது.

மேலும்  குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் பொத்துவில் மற்றும் திருக்கோவில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகின்றனர்.




No comments