சம்மாந்துறை வலயத்தில் சாரணீய ஆசிரியர்களுக்கு சின்னம் சூட்டும் விழா!!
( வி.ரி.சகாதேவராஜா)
"ஒழுக்கமும் ஆளுமையும் உள்ள மாணவர் சமூகத்தை சாரணியத்தினூடாக உருவாக்குவோம்" எனும் இலக்கினை மையமாக வைத்து சாரணிய ஆசிரியர்களிற்கு முதலாம் கட்ட பயிற்சிகள் நடாத்தப்பட்டது.
அதன் போது சின்னம் சூட்டும் நிகழ்வு சம்மாந்துறை அல் மர்ஜான் தேசிய பாடசாலையில் பிரதிக் கல்வி பணிப்பாளர் எச்.நைறோஸ்கான் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
பிரதம அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் சே.மகேந்திரகுமார், கௌரவ அதிதியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் த.பிரபாசங்கர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் யூஎல்எம். ஹாசிம் நிகழ்வை நெறிப்படுத்தினார்.
No comments